பின்லாந்து நாட்டில் அண்மையில் நடைபெற்ற புகழ்பெற்ற 'குல்தரந்தா கலந்துரையாடல்' மாநாட்டின் குழு விவாத மேடையில் நிகழ்ந்தது.
உக்ரைன் போருக்குப் பிந்தைய உலகளாவிய எரிசக்தி மாறுதல்கள் மற்றும் புவிசார் அரசியல் குறித்து விவாதிக்க நடைபெற்ற இந்த மாநாட்டில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பின்லாந்து வெளியுறவு அமைச்சர் எலினா வால்டோனென் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உதவி வெளியுறவு அமைச்சர் லானா நுசிபே ஆகியோர் பங்கேற்றனர்.
உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கவும் இந்தியாவின் எரிசக்தி கொள்கையை உலக அரங்கில் தெளிவாக விளக்கவும் இந்த விவாதம் ஒரு முக்கிய தளமாக அமைந்தது.
பின்லாந்து அமைச்சரின் அதிரடி ஆதரவு..
ரஷ்ய எண்ணெய் மீதான மேற்கத்திய விலை உச்சவரம்பின் நோக்கம் உலக சந்தையைப் பாதிப்பதைத் தவிர்ப்பதே என்று பின்லாந்து வெளியுறவு அமைச்சர் எலினா வால்டோனென் தெரிவித்துள்ளார்.
இந்தியா அந்த விதிமுறைகளைப் பின்பற்றியே எண்ணெய் வாங்கியுள்ளதால், அதில் எந்தத் தவறும் இல்லை என அவர் குறிப்பிட்டு, இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு அளித்துள்ளார்.
ஐரோப்பாவின் இரட்டை நிலையை உடைத்த ஜெய்சங்கர்..
உக்ரைன் போருக்குப் பின் ஐரோப்பிய நாடுகள் ஒட்டுமொத்தமாக மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெயை வாங்கத் தொடங்கியதால், இந்தியாவின் சந்தையைப் பாதுகாக்க ரஷ்யாவிடம் செல்ல வேண்டிய சூழல் கட்டாயம் ஏற்பட்டது என்று அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கினார்.
உலகளாவிய எரிசக்தி சந்தையை நிலைப்படுத்த ரஷ்ய எண்ணெயை வாங்குமாறு அமெரிக்காவே இந்தியாவைக் கேட்டுக்கொண்டதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் நாடுகளுக்கு இத்தனை காலம் ஐரோப்பா ஆயுதங்களை விற்று வந்ததை நினைவு கூர்ந்த அவர், ஆனால் இந்தியா என்றாவது ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்திருக்கிறதா என்று ஐரோப்பிய நாடுகளுக்கு கேள்வி எழுப்பினார்.