அமெரிக்கா - ஈரான் மோதலை தடுப்பதில் இந்தியாவால் மட்டுமே முக்கிய பங்காற்ற முடியும் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தற்போது இருநாடுகளுக்கிடையே மத்தியஸ்தம் செய்துவந்தாலும், நீண்ட கால தீர்வுக்கு இந்தியாவின் ராஜதந்திர அனுபவமே கைகொடுக்கும் என தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய லாவ்ரோவ்,
“அவசரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் உதவி வருகிறது. இருப்பினும் அவர்கள் நீண்டகால மத்தியஸ்தரை நாடினால், பரந்த ராஜதந்திரப் பின்னணி மற்றும் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு இந்தியா அந்த பாத்திரத்தை வகிக்க முடியும்” என தெரிவித்தார்.