உலகம்

விதிமீறி இயங்கும் இந்திய வாகனங்கள்- நேபாளத்தில் தேடுதல் வேட்டை

சுங்க கட்டணம் செலுத்தாமலும், அனுமதியை தாண்டி இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

நேபாளத்தில், பீகார் மாநிலத்தை ஒட்டியுள்ள மாதேஷ் மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் சட்டவிரோதமாக இயங்கி வருவதாக அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

சுங்க கட்டணம் செலுத்தாமலும், குறிப்பிட்ட கால அனுமதியை தாண்டியும் அவை இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மாதேஷ் மாகாணத்தில் சட்டவிரோதமாக இயங்கி வரும் இந்திய பதிவு வாகனங்களை பிடிக்க அதிகாரிகள் தேடுதல் வேட் டையை தொடங்கி உள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை அவசியம் என்று போலீஸ் செய்தித்தொடர்பாளர் கமல் தாபா தெரிவித்தார்.