உலகம்

கனடாவில் இந்திய வம்சாவளி வாலிபர் சுட்டுக்கொலை

முதற்கட்ட விசாரணையில் இந்தக் கொலை திட்டமிட்டே நடத்தப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

பஞ்சாப்பை சேர்ந்தவர் ஜஸ்மான் சேகோன்(வயது 27). இவர் கனடாவில் வசித்து வந்தார். இந்தநிலையில் வான்கூவர் அருகே சர்ரே பகுதியில் ஜஸ்மான் சேகோன் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

அவரை காரில் 2 பேர் துரத்தி சென்றனர். பின்னர் அந்த காரில் இருந்து இறங்கிய 2 பேர், ஜஸ்மான் சேகோனை மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றனர்.

முதற்கட்ட விசாரணையில் இந்தக் கொலை திட்டமிட்டே நடத்தப்பட்டது என்பதும், குற்றக் குழுக்களுடன் தொடர்புடையது என்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT