அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையிலான கடந்த மாதம் இறுதியில் 60 நாள் போர் நிறுத்த புரிந்துணர்வு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டதாக ஈரான் அறிவித்தது. அந்த வழியாக கப்பல் போக்குவரத்து தொடங்கின. கடந்த 8-ந்தேதி திடீரென ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற இரண்டு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் உடனான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். மேலும், ஈரானை தாக்க 1000 ஏவுகணைகள் தயாராக இருப்பதாக எச்சரித்தார்.
இந்த நிலையில் இன்று காலை ஓமன் கடற்கரைக்கு அப்பால் சைபிரஸ் கொடியுடன் சென்ற கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த 10 இந்தியர்கள் தப்பினர். ஆனால் ஒரு இந்தியரை காணவில்லை. அவரை தேடும் பணி தீவிரமான நடைபெற்று வருகிறது.
வணிக கப்பலான ஜி.எஃப்.எஸ். கேலக்சி மீது இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறொம். கப்பலில் 11 இந்தியர்கள் இருந்தனர். இதில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஒரு இந்தியர் மாயமானதாக தகவல் வந்துள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஓமனில் உள்ள இந்திய தூதரகம் "சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதோடு, நடைபெற்று வரும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக ஓமன் நாட்டு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது" என்றார்.
ஈரான் மீது அமெரிக்கா இன்று 100-க்கும் அதிகமான இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானும் பஹ்ரைன், குவைத் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என ஈரான் சூளுரைத்த நிலையில், போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும்.