உலகம்

ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த மேலும் 2 இந்திய LPG கப்பல்கள்

துபாயின் ராஸ் அல்-கைமாவில் நாகூராமிட்டிருந்த இந்த கப்பல்கள் ஈரானின் சிறப்பு அனுமதியுடன் தங்கள் பயணத்தைத் தொடர்ந்துள்ளன.

ஈரான் தடுத்து வைத்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மேலும் 2 எல்பிஜி கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்துள்ளன.

இந்தியா உள்ளிட்ட ஐந்து நட்பு நாடுகளின் கப்பல்கள் மட்டும் ஹார்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த ஈரான் அனுமதி அளித்திருந்தன.

இந்நிலையில் இந்தியக் கொடியுடன் பயணித்த BW ELM மற்றும் BW TYR ஆகிய இரண்டு எல்பிஜி கப்பல்கள் பாதுகாப்பாக ஜலசந்தியைக் கடந்து சர்வதேச கடற்பரப்பிற்குள் நுழைந்துள்ளன.

இந்த இரண்டு கப்பல்களும் இணைந்து சுமார் 90,000 மெட்ரிக் டன் எல்பிஜி எரிவாயுவைக் கொண்டு வருகின்றன.

துபாயின் ராஸ் அல்-கைமாவில் நாகூராமிட்டிருந்த இந்த கப்பல்கள் ஈரானின் சிறப்பு அனுமதியுடன் தங்கள் பயணத்தைத் தொடர்ந்துள்ளன.

இதற்கிடையில், 47,000 மெட்ரிக் டன் எரிவாயுவுடன் வந்த 'ஜக் வசந்த்' கப்பல் ஏற்கனவே குஜராத்தின் வாதினார் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

மேலும் சில இந்திய எரிபொருள் கப்பல்கள் ஐக்கிய அரபு அமீரகக் கடற்பரப்பில் ஈரானின் அனுமதிக்காகக் காத்திருக்கின்றன.

இவை அனைத்தும் இந்தியாவை வந்தடையும் போது, உள்நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.