டிரம்ப்  
உலகம்

அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய எஃகு ஆலையை கட்ட இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் - டிரம்ப் அறிவிப்பு

அயோவா மாநிலத்தில் 15 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 1.4 லட்சம் கோடி) என்ற பெரும் செலவில் அமையும்.

அமெரிக்காவில் அமையவிருக்கும் மிகப்பெரிய எஃகு ஆலை கட்டுமான திட்டத்தை இந்திய நிறுவனம் கைப்பற்றியுள்ளது

இந்தியாவின் முன்னணி நிறுவனமான எஸ்ஸார் குழுமத்திற்குச் சொந்தமான மெசாபி மெட்டாலிக்ஸ், அமெரிகாவில் பிரம்மாண்டமான எஃகு ஆலையை அமைக்க உள்ளது. இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில் 15 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 1.4 லட்சம் கோடி) என்ற பெரும் செலவில் அமையவிருக்கும் இந்த எஃகு ஆலை அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய எஃகு ஆலையாக இருக்கும் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

டிரம்ப் அறிவிப்பு

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் டிரம்ப் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த கூட்டத்தில் மெசாபி மெட்டாலிக்ஸ் தலைவர் ரேவந்த் ரூயா, எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனர் ரவி ரூயா மற்றும் பிற நிறுவனப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், இந்த ஆலை மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் மலிவு விலையில் தரமான எஃகை உற்பத்தி செய்யும் என்று கூறினார்.

இந்தத் திட்டம், மூலப்பொருள் கொள்முதல் முதல் எஃகு உற்பத்தி வரை ஒரு ஒருங்கிணைந்த விநியோக அமைப்பை உருவாக்கும் என்றும், இது முற்றிலும் அமெரிக்காவிலேயே செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலக்கு

2030க்குள் எஃகு உற்பத்தியைத் தொடங்க இலக்கு வைத்துள்ள இந்த ஆலை, முதல் கட்டத்தில் ஆண்டுக்கு 7.5 மில்லியன் டன் உற்பத்தித் திறனைக் கொண்டிருக்கும்.

எதிர்காலத்தில் இதை 10 மில்லியன் டன்னாக அதிகரிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அமெரிக்காவில் மிகப்பெரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுரங்கம் முதல் எஃகு உற்பத்தி வரை '100 சதவீதம் அமெரிக்க' விநியோகச் சங்கிலியை இந்த ஆலை கட்டமைக்கும் என்று மெசாபி மெட்டாலிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT