அமெரிக்காவின் ஒரு கல்லூரியில் விருந்தினராக பங்கேற்ற தொழிலதிபர் அனில் கோச்சார் என்பவர் 202 மாணவர்களுக்கான கல்விக்கடனை அடைந்துள்ளார்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம், ராலீ நகரில் வில்சன் காலேஜ் ஆப் டெக்ஸ்டைல்ஸ் கல்லூரியில் ஜவுளி தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி அந்த கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்று வந்தது.இந்த விழாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் அனில் கோச்சார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
விழாவில் பேசிய அவர் இன்று இளநிலை பட்டம் பெற்ற 176 பேர் மற்றும் முதுநிலை பட்டம் பெற்ற 26 பேர் என மொத்தம் 202 மாணவ, மாணவியரின் ஒட்டுமொத்தமாக ரூ.76.18 கோடி கடனை தாம் அடைப்பதாக உறுதியளித்து அதற்கான தொகையையும் அளித்தார்.
என் தந்தை பிரகாஷ் கோச்சார் குஜராத்திலிருந்து அமெரிக்கா வந்து குடியேறினார். அப்போது 1950 ஆம் இதே கல்லூரியில் பட்டம் வென்றார் என்பதை நன் பெருமையுடன் இந்த இடத்தில தெரிவித்து கொள்கிறேன் என்றும், அவர் இல்லையென்றாலும் அவர் படித்த கல்லூரியில் நான் சிறப்பு விருந்தினராக வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி என்று கண்கலங்கி உரையாடினார்.
என் தந்தையின் நினைவாக நான் இந்த கடனை அடைகிறேன் என்றும் தெரிவித்தார்.
இதனால் நானும் ஏன் குடும்பமும் இந்த கல்லூரிக்கு கடன்பட்டிருக்கிறோம். இங்கு படிக்கும் மாணவ மாணவியர் அனைவரும் சுதந்திர பறவைகளாக பறக்க வேண்டும் என பெருமையுடன் கூறினார்.
இந்திய தொழிலதிபர் அனில் கோச்சாருக்கு மாணவ, மாணவியர்களும், கல்லூரி நிர்வாகம் சார்ந்த அனைவரும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
அனில் கோச்சாரை நியூயார்க் டைம்ஸ் உட்பட அமெரிக்காவின் முன்னணி ஊடகங்கள் போன்ற அனைவருமே பாராட்டி செய்திகளை வெளியிட்டுள்ளனர்.