இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாமிற்கு இந்திய பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"இங்கிலாந்து நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்தியாவும் இங்கிலாந்தும் பகிர்ந்தளிக்கப்பட்ட ஜனநாயக மதிப்பீடுகளால் பிணைக்கப்பட்டுள்ளன.
வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் இருநாட்டு மக்களிடையேயான உறவு என விரிவான ஒத்துழைப்பை இரு நாடுகளும் பேணி வருகின்றன.
இந்த மாதத்தில் CETA (Comprehensive Economic and Trade Agreement) ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதன் மூலம், நமது இருதரப்பு பங்களிப்பு மேலும் வலுவடையும்." என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா-இங்கிலாந்து இடையேயான விரிவான மூலோபாய பங்களிப்பை வலுப்படுத்தவும், பகிரப்பட்ட Vision 2035 இலக்குகளை முன்னோக்கி கொண்டு செல்லவும் ஆண்டி பர்ன்ஹாமுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் முந்தைய இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நேற்று ராஜினாமா செய்கிறார்.
அதைத் தொடர்ந்து, அண்மையில் நடந்த உட்கட்சித் தேர்தலில் வெற்றி பெற்று ஆளும் தொழிற்கட்சியின் புதிய தலைவராக தேர்வான ஆண்டி பர்ன்ஹாம் நேற்று இங்கிலாந்து மன்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு அவருக்கு மன்னர் முறைப்படி அழைப்பு விடுத்தார்.
புதிய பிரதமர் மன்னரின் கையை முத்தமிட்டுத் தனது விசுவாசத்தை உறுதிப்படுத்தியதை தொடர்ந்து அவர் அதிகாரப்பூர்வமாக பிரதமராக அறிவிக்கப்பட்டார்.
2016ம் ஆண்டு ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதில் இருந்து 6 பிரதமர்களும், 2022ம் ஆண்டு தொடங்கி 4 பிரதமர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்கும் 7வது நபர் ஆண்டி பர்ன்ஹாம்.
கடந்த ஆண்டு இறுதியில் இந்தியா- இங்கிலாந்து இடையே சுதந்திர வார்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகினது. இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் இந்தியர்களுக்கான விசா பிரச்சனைகள் தீர்வு, கார்கள் மற்றும் ஸ்காட்ச் விஸ்கி போன்ற இங்கிலாந்து ஏற்றுமதிகள் மீதான வரிகள் குறைப்பு ஆகியவை அடங்கும்.