அமெரிக்கத் தடைகள் காரணமாக 2019 மே மாதம் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தியது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரினால் மத்திய கிழக்கில் எரிபொருள் விநியோகம் தடைபட்டு ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதைத் தொடர்ந்து உலகளவில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இதன் தாக்கம் காணப்படுகிறது. ஈரான் அனுமதியுடன் மத்திய கிழக்கில் உள்ள இந்தியாவின் ஏரிவாயு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வருகின்றன.
மேலும் அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தில் ரஷிய எண்ணெய் வாங்க மாட்டோம் என இந்தியா வாக்குறுதி அளித்திருந்தால் தடைபட்ட ரஷியாவுடனான வர்த்தகம், அமெரிக்காவின் 30 நாள் அனுமதியால் மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்கிடையே சர்வதேச அளவில் எண்ணெய் நெருக்கடி ஏற்படாமல் இருப்பதை தடுக்க ஈரானின் கச்சா எண்ணெய்யை வாங்கவும் அமெரிக்கா அண்மையில் தண்டைகளை தளர்த்தியது.
அதன்படி 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது. ஈரானின் 600,000 பேரல் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளது.
இந்த கப்பல் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி குஜராத்தின் வதினார் துறைமுகத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்டுகிறது.