உலகம்

இந்தியா உலகிற்காக புதுமைகளை படைக்கிறது: பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

இந்தியாவின் இளம் கண்டுபிடிப்பாளர்கள், மனிதகுலம் முழுவதற்கும் பயனளிக்கும் தீர்வுகளைக் கண்டறிந்து வருகின்றனர் என்று பிரதமர் மோடி பேசினார்.

இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ், ஸ்லோவாகியா மற்றும் ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்வதற்கான ஒரு வார கால பயணமாக நேற்று இந்தியாவில் இருந்து புறப்பட்டார். பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் கட்டியணைத்து வரவேற்றார்.

இருவரும் நீஸ் நகரில் Bharat Innovates event-ஐ தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையே ஒரு சிறப்புக் கூட்டாண்மை உள்ளது. அதனுள் இணைப்பு, உறுதிப்பாடு, புதுமை, உத்வேகம் மற்றும் பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வை ஆகியவை அடங்கியுள்ளன.

இந்தியாவின் இளம் கண்டுபிடிப்பாளர்கள், மனிதகுலம் முழுவதற்கும் பயனளிக்கும் தீர்வுகளைக் கண்டறிந்து வருகின்றனர்.

இந்தியா உலகில் தீர்வுகளைப் பெறும் நுகர்வோராக அல்லாமல், தீர்வுகளுக்குப் பங்களிப்பவராக உருவெடுத்துள்ளது.

இந்தியா ஒரு நிலையான எதிர்காலத்திற்காகப் புதுமைகளைப் படைக்கிறது. இந்தியா உலகிற்காகப் புதுமைகளைப் படைக்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற முக்கியத் துறைகளில் இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையே ஒரு உண்மையான கூட்டாண்மை உள்ளது என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்தார்.