உலகம்

பிரான்சில் தரையிறங்கிய பிரதமர் மோடி.. இன்று அதிபர் மேக்ரானுடன் சந்திப்பு

ஜூன் 16 வரை நடைபெறும் 'பாரத் இன்னோவேட்ஸ் 2026' மாநாட்டை மோடியும் மேக்ரானும் தொடங்கி வைக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ஒருவார கால ஐரோப்பியப் பயணத்தின் முதல் கட்டமாக பிரான்ஸ் சென்றடைந்தார்.

அங்கு கடலோர நகரமான நைஸ் சென்று தரையிறங்கிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆலோசனை

இன்று (ஜூன் 14) பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இடையேஇருதரப்பு பேச்சுவார்த்தை நைஸ் நகரில் நடைபெற உள்ளது.

இன்று நடைபெறும் ஆலோசனையில், பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தி தொழில்நுட்பங்கள், அண்மையில் இறுதி செய்யப்பட்ட இந்தியா - ஐரோப்பிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதிக்க உள்ளனர்.

பாரத் இன்னோவேட்ஸ் 2026

தொடந்து நைஸ் நகரில் உள்ள கண்காட்சி வளாகத்தில் இன்று முதல் ஜூன் 16 வரை நடைபெறும் 'பாரத் இன்னோவேட்ஸ் 2026' கண்டுபிடிப்பு மற்றும் புத்தொழில் மாநாட்டை மோடியும் மேக்ரானும் இணைந்து தொடங்கி வைக்கின்றனர்.

இந்தியா - பிரான்ஸ் Year of Innovation ஒரு பகுதியாக மத்திய கல்வி அமைச்சகத்தால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 120 அதிநவீன Deep-Tech ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், 15 முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள 500 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

பிரான்சில் இருந்து கிளம்பி ஜூன் 14 பிரதமர் மோடி ஸ்லோவாக்கியா நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.