Elon Musk warns of India’s fertility falling below replacement level 
உலகம்

இந்தியாவில் குறையும் பிறப்பு விகிதம்: எலான் மஸ்க் எச்சரிக்கை!

இந்தியாவில் மக்கள் தொகை போக்குகள் மிகவும் குறைந்து வருவதாகவும் கருவுறுதல் அளவீடுகள் சரிந்து வருவதாகவும் எச்சரித்தார்.

உலக நாடுகளுக்கு இடையே உள்ள மக்கள் தொகை மற்றும் கருவுறுதல் கணக்கெடுப்பு குறித்து சமீபத்திய ஆய்வு ஒன்று x தளத்தில் வெளியானது.

அதனை குறிப்பிட்ட எலான் மஸ்க், இந்தியாவில் மக்கள் தொகை போக்குகள் மிகவும் குறைந்து வருவதாகவும், கருவுறுதல் அளவீடுகள் சரிந்து வருவதாகவும் எச்சரித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்," இந்தியாவின் பிறப்பு விகிதம் மாற்று விகிதத்திற்குக் கீழே குறைந்துள்ளது. மிகவும் படித்தவர்களில், இந்தியாவின் பிறப்பு விகிதம் பல ஆண்டுகளுக்கு முன்பே மாற்று விகிதத்திற்குக் கீழே குறைந்துவிட்டது" என்றார்.

ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தால் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை நிலை அறிக்கையிலும் இந்தியாவில் கருவுறுதல் போக்கு குறைந்து வருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) ஒரு பெண்ணுக்கு 2.1 சதவீதத்திலிருந்து 1.9 சதவீதமாக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக கருவுறுதல் விகிதங்களில் ஏற்படும் தொடர்ச்சியான சரிவு காலப்போக்கில் குறைந்த பிறப்பு விகிதங்களுக்கு வழிவகுக்கிறது, இது மக்கள்தொகை வளர்ச்சியை மெதுவாக்கி, வயதான சமூகம் உருவாகவும் பங்களிக்கக்கூடும்.

இந்தநிலையில், பெரும்பாலான இந்திய மாநிலங்கள் தற்போது இந்த அளவுகோலுக்குக் கீழே சரிந்துவிட்டதாக சமீபத்திய தரவுகள் குறிப்பிடுகின்றன.

SCROLL FOR NEXT