உலகம்

ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி.. அல்பனீசுடன் சந்திப்பு - இரு நாடுகள் இடையே 18 ஒப்பந்தங்கள் கையெழுத்து

கூட்டுப் பிரகடனத்தில் இருவரும் கையெழுத்திட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

3 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்தோனேசிய பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஆஸ்திரேலியா சென்றடைந்தார்.

அங்கு தலைநகர் மெல்போர்னில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீசை இன்று மோடி சந்தித்தார். முன்னதாக ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஸ்காட் மாரிசனையும் மோடி சந்தித்தார். முன்னாள், இந்நாள் பிரட்மர்களுடன் பிரதமர் மோடி தனித்தனியே செல்பி எடுத்துக்கொண்டார்.

இருநாட்டு பிரதிநிதிகள் இடம்பெற்ற உயர்மட்ட கூட்டத்தில் இருவரும் பங்கேற்று இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதன்பின் இவருவரும் கூட்டதாக செய்தியாளர் சந்திப்பு நடத்தினர்.

பிரதமர் மோடி அறிவிப்பு

இதன்போது பேசிய பிரதமர் மோடி, 2015 இல் எட்டப்பட்ட ஆஸ்திரேலியா- இந்தியா அணுசக்தி ஒத்துழைப்பு உடன்படிக்கையின்கீழ், அமைதி நோக்கங்களுக்காக ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானதாக அறிவித்தார்.

மேலும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை எட்டுவது குறித்தும் பேசியதாக தெரிவித்தார்.

அதேநேரம் இரு நாடுகள் இடையே முக்கிய கனிமங்களை பரிமாற்றம் செய்யும் வழித்தடம், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் ஆகியவற்றை நோக்கி வேலை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

பாதுகாப்பு

இந்தோ-பசிபிக் என்பது இரு கடல்கள் சந்தித்துக்கொள்ளும் புள்ளி மட்டுமல்ல, அது ஒத்த கருத்துடைய இந்தியா- ஆஸ்திரேலியா போன்ற ஜனநாயக நாடுகள் சங்கமிக்கும் புள்ளியுமாகும். பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த கூட்டுப் பிரகடனத்தில் இருவரும் கையெழுத்திட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா புத்தாக்க வழித்தடம் மூலம் இரு நாடுகளின் பாதுகாப்பு துறை புத்தொழில்கள் மற்றும் நிறுவனங்களின் இணக்கத்தை வலுப்படுத்தவும் உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

18 ஒப்பந்தங்கள்

இதனிடையே இரு நாடுகளிடையே 18 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் , அதன் பயன்கள் குறித்தும் மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் பக்கத்தில் அதன் விவரங்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த கூட்டுப் பிரகடனம், இந்தியா - ஆஸ்திரேலியா எரிசக்தி பாதுகாப்பு கூட்டறிக்கை, இந்தியா- ஆஸ்திரேலியா சிவில் அணுசக்தி உடன்படிக்கையை இறுதி செய்வதற்கான நிர்வாக ரீதியிலான உடன்பாடு, சைபர், கிரிடிக்கல் டெக்னாலஜி மற்றும் விநியோக சங்கியில் ஆஸ்திரேலியா - இந்தியா கூட்டுறவு, இந்திய கடலோர காவல்படை மற்றும் ஆஸ்திரேலிய கடல்சார் எல்லை கமான்ட் இடையே புரிந்துணர்வு உள்ளிட்ட உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.