அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகிய இருபெரும் உலகத் தலைவர்களும் பீஜிங்கில் உள்ள 'கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்' வளாகத்தில் இன்று சந்தித்து பேசினார்கள். சுமார் 2 மணி நேரம் 15 நிமிடத்திற்கு பேச்சுவார்த்தை நீடித்தது.
அதிபர் டிரம்ப் மற்றும் அவர்களுடன் வந்திருந்த அமெரிக்கா வணிக தலைவர்களிடம் "வெளி உலகிற்கான சீனாவின் கதவுகள் மேலும் விரிவாகத் திறக்கப்படும்" என்று கூறி உறுதியளித்தார்.
மேலும் சீன அதிபர் ஷி ஜின்பிங் அதிபர் டிரம்பிடம் நிறைய நிபந்தனைகளை முன்வைத்து பேசினார்.
“தைவான் பிரச்சினை,” “ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள்,” “பாதைகள் மற்றும் அரசியல் அமைப்புகள்,” மற்றும் “சீனாவின் வளர்ச்சி உரிமை” ஆகிய நான்கு சிவப்பு கோடுகளுக்கு அமெரிக்கா சவால் விடக்கூடாது என்று ஷி ஜின்பிங் கூறினார்.
சீன பொருட்களுக்கு 60% இறக்குமதி வரியை குறைக்க வேண்டுமென்றால், விவசாயிகளிடம் இருந்து பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள சோயா பீன்ஸ், மக்காச்சோளம் மற்றும் அமெரிக்கப் பன்றி இறைச்சி ஆகியவற்றைச் சீனா பெருமளவில் இறக்குமதி செய்ய வேண்டும் என்ற டிரம்பின் நிபந்தனைக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் ஒப்புக்கொண்டார்.
ஷி ஜின்பிங்கிடம்,' நீங்கள் ரஷியாவிற்கு ராணுவ உதிரிப்பகங்களை அனுப்புவதை நிறுத்தவும் அவர்களுக்காக முன்வந்து உதவுவதையும் நிறுத்தவேண்டும்' என்றும் டிரம்ப் வலியுறுத்தினார்.
மேலும், வல்லரசாக வளர்ந்து வரும் சீனாவும், வளம் பெற்ற வல்லரசு நாடான அமெரிக்காவும் மோதிக்கொண்டால் உலகம் சீரழிந்து விடும் என 'துசிடிடிஸ் பொறி' விதியை சீன அதிபர் அமெரிக்க குழுவினரிடம் கூறினார்.
கடைசி பேசுவார்த்தையாக, வரவிருக்கும் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவிற்கு, அமெரிக்கா மக்களுக்கு ஷி ஜின்பிங் வாழ்த்தும் தெரிவித்தார்.