லெபனானில் உள்ள தனது ஆதரவு அமைப்பான ஹில்புல்லாவை கட்டுப்படுத்தாவிட்டால், தெஹ்ரான்மீது மீண்டும் தாக்குதலை கடுமையாக்குவோம் என ஈரானுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
இதுதொடர்பாக தனது த்ரூத் ஷோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்,
“லெபனானில் உள்ள தங்களின் கைக்கூலிகள் மூலம் பிரச்சனை செய்வதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஈரான்மீது மீண்டும் கடுமையான தாக்குதலை முன்னெடுப்போம். ஆனால் இந்த முறை முன்பைவிட இன்னும் கொடூரமாக இருக்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் ஈரான் - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை தொடங்கிய சில நிமிடங்களுக்குப் பிறகு ட்ரம்பின் இந்தப் பதிவு வந்துள்ளது.
சமீபத்தில் கையெழுத்தான 60 நாள் அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து, முழு போர் நிறுத்தம் தொடர்பாக ஈரான், பாகிஸ்தான், கத்தார் மற்றும் அமெரிக்கா நாடுகள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தும் வரும்நிலையில் மீண்டும் பதற்றம் வெடித்துள்ளது.
மறுபக்கம் இந்த பதற்றத்திற்கு காரணமாக இஸ்ரேலின் தாக்குதலால், லெபனானில் கடந்த 100 நாட்களில் மட்டும் உயிரிழப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.