இனி நான் நல்லவனாக இருக்க மாட்டேன் என கையில் துப்பாக்கியுடன் புகைப்படம் வெளியிட்டு ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ட்ரூத் சோஷியல் தளத்தில் அவர், ரைபிள் துப்பாக்கியை ஏந்தியபடி இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு "இனிமேல் நான் நல்லவனாக (Nice Guy) இருக்கப் போவதில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரது பதிவில், “ஈரானால் இணைந்து செயல்படமுடிய வில்லை. அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது எப்படி என்று கூட அவர்களுக்கு தெரியவில்லை.
அவர்கள் விரைவில் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும். அணு திட்டம் தொடர்பான தீர்வு விரைவில் எட்டப்படாவிட்டால், அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ளும்" என்று எச்சரித்துள்ளார்.
ஈரானின் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அரக்சி ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்து ஆதரவை நாடிய நிலையில் டிரம்ப்பின் இந்த மிரட்டல் வந்துள்ளது.