அமெரிக்காவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் இடைக்காலத் தேர்தல் எனப்படுகிறது. இந்தத் தேர்தலில் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.
மாறாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன் முடிவுகள் ஜனாதிபதியின் எஞ்சிய ஆட்சிக்காலத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் இந்த தேர்தல் உலகம் முழுவதும் உற்று நோக்கப்பட்டது.
இந்திய நேரப்படி நேற்று மாலை 5 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட்சபை யின் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வாக்கு பதிவு இந்திய நேரப்படி இன்று அதிகாலை முடிந்தது.
வாக்குப்பதிவு முடிந்ததுமே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகளின்படி ஜனநாயக கட்சி முன்னிலை பெற்றுள்ளது. டிரம்பின் குடியரசுக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதனால், அமெரிக்க இடைக்கால தேர்தலில் ஜனநாயக கட்சி பெரும்பான்மை பெற்றதால், டிரம்பின் குடியரசுக் கட்சி செனட் சபையை இழந்தது.
100 இடங்களை கொண்ட செனட் சபையில் ஜனநாயக கட்சி 51 இடங்களை பெற்று பெரும்பான்மை நிலையை அடைந்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட செனட் சபை உறுப்பினர்கள் 6 ஆண்டுகள் வரை பதவியில் இருப்பர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயக கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில்,"தேர்தல் முடிவுகளை முழுமனதுடன் ஏற்பதாகவும், அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய அவர்,"அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளை முழுமனதுடன் ஏற்க தயாராக இருக்கிறேன்" என்றார்.