உலகம்

ஐதராபாத்தில் டிரம்பின் பெயரில் சாலை!- டிரம்ப் பெருமிதம்

இந்தியாவில் ஒரு அமெரிக்க அதிபருக்குக் கிடைக்கும் முதல் கௌரவம் இது.

ஐதராபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அருகே உள்ள சாலைக்கு, தெலங்கானா அதிகாரப்பூர்வமாக 'டொனால்ட் டிரம்ப் அவென்யூ' எனப் பெயர் மாற்றியது.

இந்த அவென்யூ, ஐதராபாத்தின் நிதி மாவட்டமான நானக்ராம்குடாவில் அமைந்துள்ளது. இப்பகுதி அமெரிக்கத் தூதரகம் மற்றும் பல முக்கிய சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்குகின்றன.

ஐதராபாத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவின் அடையாளப்பூர்வமான அங்கீகாரமாகவே இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த நடவடிக்கை நகரின் உலகளாவிய மதிப்பை வலுப்படுத்தவும், இந்தியா-அமெரிக்கா உறவில் அதன் பங்கை முன்னிலைப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் இதற்கு நன்றி தெரிவித்தார். மேலும் இச்சிறப்பு விழாவின் புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, அவர் கூறியதாவது:-

"இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள புதிய டொனால்ட் டிரம்ப் அவென்யூ. இதுபோன்று கௌரவிக்கப்படும் முதல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்ப். நன்றி".

இவ்வாறு 'ட்ரூத் சோஷியல்' எனும் எக்ஸ் தளத்தில் கூறினார்.

SCROLL FOR NEXT