பேருந்து விபத்து  
உலகம்

ஹங்கேரி: சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து - 12 பேர் உயிரிழப்பு

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஹங்கேரியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.

விபத்து

போலந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் போஸ்னியவில் உள்ள புனித தலத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் நாடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் இருந்து சுமார் 140 கி.மீ தொலைவில் உள்ள மெஸோகெரெஸ்டெஸ் அருகே உள்ளூர் நேரப்படி நேற்று நள்ளிரவு 1 மணியளவில் நெடுஞ்சாலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஓட்டுநர் கைது

பேருந்தில் மொத்தம் 57 பயணிகளும் 2 ஓட்டுநர்களும் இருந்தனர். உயிரிழந்த 12 பேரைத் தவிர, காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் காவல்துறை தெரிவித்துள்ளது. ஓட்டுநர் தற்போது காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு ஹங்கேரி மற்றும் போலந்து நாட்டின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்