உலகம்

சவுதி விமான நிலையங்கள் மீது ஹவுதிக்கள் மீண்டும் தாக்குதல்.. சண்டையில் தலையிடுவது பற்றி டிரம்ப் பதில்

மெக்கா மற்றும் மதீனா தவிர மற்ற அனைத்து நகர விமான நிலையங்களும் இலக்கு

சவுதியில் மீண்டும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது மீண்டும் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

நேற்று முன் தினம் அங்கு ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். 300 பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் ஒரு இந்தியரும் அடங்குவார். அவரின் இரண்டு மகன்கள் காயமடைந்தனர்.

மீண்டும் தாக்குதல்

இந்நிலையில் நேற்று மீண்டும் ரியாத் கிங் காலித் விமான நிலையம் மீது ஹவுதி கிளர்த்தியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக சவுதி அறிவித்துள்ளது. ஏவப்பட்ட ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் சிலர் காயமடைந்ததாக சவுதி சிவில் விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நேற்று சவுதியின் கிழக்கு பகுதியில் உள்ள தம்மாம் (Dammam) விமான நிலையம் மீதும் அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக ஹவுதாக்கல் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த தாக்குதல்களை சவுதி இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

எச்சரிக்கை

ஏற்கனவே நேற்று, சவுதியில் புனித நகரங்களான மெக்கா மற்றும் மதீனா தவிர மற்ற அனைத்து நகர விமான நிலையங்களும் தங்களுக்கு இலக்கு வரம்பில் உள்ளதாகவும் எனவே மக்கள் பயணிக்க வேண்டாம் என்றும் ஹவுதி அமைப்பு எச்சரித்திருந்தது. இந்நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிகிறது.

இதனிடையே ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள சனா நகரின் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு சவுதி தான் காரணம் என ஹவுதி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்கா தலையீடு

ரியாத் விமான நிலையம் மீது சனிக்கிழமை நடந்த தாக்குதலை தொடர்ந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவுதி, ஏமன் அரச படைகளுக்கு ஆதரவாக இருப்போம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் தலையிடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், "“We may. We’re going to look at it” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT