அமெரிக்காவில் கொலை மற்றும் வன்முறைகள் குறைவு 
உலகம்

அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் குற்ற சம்பவங்கள் குறைந்து வருகிறது: FBI அறிக்கை

அமெரிக்காவில் கொலை மற்றும் வன்முறை குற்றங்கள் சரிவை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கவில் 1936-ல் இருந்து கொலை மற்றும் வன்முறைக் குற்றங்களின் புள்ளிவிவரங்களை ஆராய்ந்தபோது, நாட்டின் 2025-ஆம் ஆண்டு கொலை விகிதம் வரலாற்றுச் சரிவை எட்டியுள்ளது என்று அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.

மேலும், கொலை மற்றும் வன்முறை குற்றங்களின் புள்ளிவிவரங்கள் ஆண்டுக்கு ஆண்டு மிகப்பெரிய சரிவை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சரிவுக்கான காரணங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இந்த ஆண்டில் தேசிய அளவில் ஒரு லட்சம் பேருக்கு 4.1 கொலைகள் என்ற விகிதத்தில், FBI வரலாற்றிலேயே மிகக் குறைந்த விகிதமாக 1955 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளுடன் ஒத்துப்போகிறது.

குற்றவியல் நீதிமன்றம் அறிக்கை

இதற்கிடையில், குற்றவியல் நீதிமன்றத்தின் அறிக்கை, கொலை விகிதங்கள் தொடர்ந்து குறைந்து வருவதை குறிப்பிட்டு காட்டுகிறது. இது 2026-ல் தேசிய கொலை விகிதம் மற்றொரு வரலாற்று சரிவை எட்டக்கூடும் என்றும் சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்காவில் குற்ற சம்பவங்கள் குறைந்து வருவது குறித்து குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான ஆடம் கெல்ப் கூறுகையில், “கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட மிக முக்கியமான பொது பாதுகாப்பு முன்னேற்றங்களில் இதுவும் ஒன்றாகும்.

2022-ஆம் ஆண்டிலிருந்து கொலைகள், பாதிக்கும் கீழாக குறைந்துள்ளன. இதன் காரணமாக உயிர்கள் காப்பாற்றப்பட்டு, குடும்பங்கள் மன உளைச்சலிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

சமூகங்கள் பாதுகாப்பானதாக உருவாக்கப்பட்டுள்ளன. இது கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த குற்ற சம்பவங்கள் வீழ்ச்சி அடைந்ததை விட, அதற்கான காரணங்கள் தெளிவாக தெரியாமல் உள்ளன.

குற்றவியல் நீதித்துறை செயல்பாடுகள் மற்றும் உத்திகளில் ஏற்படும் மாற்றங்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சமூகம், கலாச்சாரத்தில் ஏற்படும் பரந்த மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சாத்தியமான காரணிகளை ஆராய்ச்சியாளர்களும் சட்ட அமலாக்க அதிகாரிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் எது, எங்கே, யாருக்கு, மற்றும் என்ன சூழ்நிலைகளில் பலனளிக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் புரிந்துகொள்ளாத முன்னேற்றத்தை வீணடிக்கும் அபாயமும் உள்ளது” என்று அவர் கூறினார்.

எஃப்.பி.ஐ அறிக்கை

இதுகுறித்து FBI இயக்குநர் காஷ் படேல் வெளியிட்ட அறிக்கையில், “வன்முறை குற்றங்களை ஒடுக்குவதற்காக, FBI-யும் களத்தில் உள்ள நமது சட்ட அமலாக்க அதிகாரிகளும் ஆற்றிவரும் மகத்தான பணிக்கு 2025-ஆம் ஆண்டின் குற்றப் புள்ளிவிவரங்கள் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

17,000-க்கும் மேற்பட்ட முகமைகள் தரவுகளைச் சமர்ப்பித்துள்ளன. இது 2024-ஆம் ஆண்டை விட 2.4% அதிகமாக உள்ளது.

5 லட்சம் முதல் 1 மில்லியன் வரையிலான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் கடுமையான குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளன; கொலைகள் 27%, கொள்ளை 23%, பாலியல் வன்கொடுமை 18% மற்றும் வன்முறைக் குற்றங்கள் 15% வரையிலும் குறைந்துள்ளன.

இதற்கிடையில், வெறுப்புக் குற்றங்கள் ஒட்டுமொத்தமாக 7% குறைந்து, 2024-ல் 11,404 ஆக இருந்த எண்ணிக்கை 2025-ல் 10,606 ஆக சரிந்துள்ளது.

பணியில் இருந்த சட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் மீதான தாக்குதல்கள் 2025-ஆம் ஆண்டில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டின.

அந்த ஆண்டில் நடந்த 90,178 தாக்குதல்களில் கால் பங்கு, அதிகாரிகள் கலவர அழைப்புகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்தன. கடமையில் இருந்தபோது 53 அதிகாரிகள் குற்றவியல் ரீதியாகக் கொல்லப்பட்டனர்” என்று அந்த FBI அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.