உலகம்

அமெரிக்காவின் முதல் கறுப்பின சபாநாயகர் ஆகும் ஹக்கீம் ஜெப்ரீஸ்.. யார் இவர்?

அமெரிக்க வரலாற்றில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் கறுப்பினத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரி என்ற பெருமையையும் அவர் பெறுகிறார்.

ஹக்கீம் ஜெப்ரீஸ், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் முதல் கறுப்பின சபாநாயகராகப் பொறுப்பேற்க உள்ளார்.

2026 இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெற்றதை தொடர்ந்து, ஹக்கீம் ஜெப்ரீஸ், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் முதல் கறுப்பின சபாநாயகராக பொறுப்பேற்க உள்ளார்.

முதல் கறுப்பினத்தவர்

நியூயார்க்கை 56 வயதான நாடாளுமன்ற (காங்கிரஸ்) உறுப்பினர் ஹக்கீம் ஜெப்ரீஸ், ஜனவரி 3 அன்று புதிய நாடாளுமன்றம் கூடும்போது முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1870ல் ஜோசப் ரெய்னி பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பின அமெரிக்கர் ஆகார். இந்நிலையில் 150 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கறுப்பின சபாநாயகர் பதவியேற்க உள்ளார்.

இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் கறுப்பினத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரி என்ற பெருமையையும் அவர் பெறுகிறார்.

ஜெப்ரீஸின் இந்தப் பதவி அமெரிக்க வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும்.

வாஷிங்டனில் ஜனநாயகக் கட்சியின் வெற்றி கொண்டாட்டத்தில் அவர் உரையாற்றியபோது பலரும் "சபாநாயகர்! சபாநாயகர்!" என்ற கோஷங்கள் எழுப்பினர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பிரதிநிதிகள் சபையின் ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கு அவர் தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார்.

ஹக்கீம் ஜெப்ரீஸ் என்பவர் யார்?

நியூயார்க்கின் புரூக்ளினில் பிறந்த ஜெப்ரீஸ் உடைய தந்தை விமானப்படை வீரர் ஆவார்.தாய் சமூக சேவகர் ஆவார்.

அவர் பிங்காம்டனில் உள்ள நியூயார்க் மாநிலப் பல்கலைக்கழகத்தில் பயின்று, ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

மேலும் நியூயார்க் பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் சிறந்த மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றார்.

அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு பெருநிறுவன வழக்கறிஞராகப் பணியாற்றியதோடு, நியூயார்க் மாநில சட்டமன்றத்திலும் பணியாற்றினார்.

தனது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள பகுதியில் போதைப்பொருள் பரவலின் விளைவுகளை கண்டதே, அவரை பொது சேவையில் ஈடுபட வைத்ததாக அவர் கூறியுள்ளார். ஜெப்ரீஸ்க்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

SCROLL FOR NEXT