ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் தற்போது கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டது.
உலகம் ஒரு மிகப்பெரிய போரின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது.
ஈரான் மீதான போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய உகந்த நேரம் இது.
போரினால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார பாதிப்புகளை கருத்தில் கொண்டு உடனடியாக தாக்குதல்களை நிறுத்தவேண்டும்.
இந்த மோதலில் தொடர்பில்லாத அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவதை ஈரான் உடனடியாக நிறுத்தவேண்டும்.
இது மோதல்களைத் தீவிரப்படுத்தும் முனைப்புகளில் ஈடுபடுவதற்கு நேரமல்ல. மாறாக, ராஜதந்திரப் பாதையில் பயணிக்க வேண்டிய நேரம்.
சர்வதேச சட்டங்களுக்கு முழுமையான மதிப்பளித்து, அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அனைத்து நாடுகளும் திரும்பவேண்டும்.
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பது உலக நாடுகளின் எரிபொருள் மற்றும் உர விநியோகத்தைப் பாதித்துள்ளது. இது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.