உலகம்

13 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை?.. பிரான்சின் பிரபல பாப் பாடகர் கைது

40க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல பாப் பாடகரும், முன்னணி நடிகருமான பேட்ரிக் புரூயல் 13 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்க்காட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் 1980 மற்றும் 1990களில் பாப் இசையில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் பேட்ரிக் புரூயல் (67). 40க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

கடந்த 1997, 2000 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் பேட்ரிக் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக மூன்று பெண்கள் அளித்த புகார் அழிந்திருந்தனர்.

விசாரணையின் போது, மேலும் பல பெண்கள் அடையாளம் காணப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

அவர்களும் தங்களுக்கும் அவரால் நேர்ந்த பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல்களை வாக்குமூலமாக அளித்தனர்.

இதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. இதுவே பேட்ரிக் புரூயல் நேற்று கைது செய்யப்பட முக்கியக் காரணமாக அமைந்தது.

போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் பேட்ரிக் புரூயல், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பிரான்சின் உச்ச நட்சத்திரத்தின் கைது பிரெஞ்சுத் திரைத்துறையிலும் இசை உலகிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.