பிரான்ஸை சேர்ந்த விநோத நபர் ஒருவர், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஒரு முழு விமானத்தையும் சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
பிரான்சில் கடந்த 1950ஆம் ஆண்டு பிறந்த மிச்சல் லோடிட்டோ என்ற நபர், அனைத்து குழந்தைகளை போலவும், சாதாரண உணவு வகைகளை சாப்பிட்டு வந்துள்ளார்.
இதையடுத்து இவருக்கு ஒரு கால கட்டத்தில் உணவின் மீதான ஈர்ப்பு குறைந்துள்ளது. இதன் காரணமாக இவர் தனது வீட்டில் இருந்த இரும்பு பொருட்களை சாப்பிட தொடங்கினார்.
இவருக்கு சாதாரண நபர்களை போன்று, வயிற்று கோளாறு எதுவும் ஏற்படாமல் இருந்ததுடன், இரும்பு பொருட்களும் நன்றாக செரிமானமாகி மலத்தில் வெளியேறியுள்ளது.
இதையடுத்து இந்த விசித்திர நபர், தனக்கு பசி எடுக்கும் போதெல்லாம் வீட்டில் இருந்த சிறிய இரும்பு குண்டுகளையும், சிறிய கம்பிகளையும் சாப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து இவர் பெரிய அளவிலான இரும்பு பொருட்களை வெட்டி எடுத்து சாப்பிட ஆரம்பித்தார்.
மேலும் இந்த கணமான பொருட்கள் செரிமானம் ஆவதற்காக, மினரல் ஆயில்களையும் அதிக அளவில் தண்ணீரையும் பருகி வந்ததாக மிச்சல் கூறுகிறார்.
இவர் சுமார் 18 மிதிவண்டிகள், 7 தொலைக்காட்சி பெட்டிகள், 1 கணினி உள்ளிட்ட 9 டன் இரும்பு பொருட்களை சாப்பிட்டதை தொடர்ந்து, இவருக்கு உலக சாதனை கின்னஸ் விருது வழங்கப்பட்டது.
பிரான்சில் ஒரு மேடை பொழுதுபோக்கு கலைஞராக பணியாற்றி வரும் மிச்சல், இரும்பு பொருட்களை தான் சாப்பிடும் நிகழ்வுகளை பொதுவெளியில் உலகிற்கு காண்பிற்க முடிவு செய்தார்.
இதையடுத்து தான் ஒரு முழு ஜெட் விமானத்தையும் சாப்பிட போவதாக மிச்சல் அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஜெட் விமானத்தை ஆயிரம் சிறிய துண்டுகளாக வெட்டி அவர், அதனை பொதுவெளியில் சாப்பிட ஆரம்பித்தார்.
பிரான்சில் கடந்த 1978 ஆம் ஆண்டு ஜெட் விமான பாகங்களை சாப்பிட தொடங்கிய இவர், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 1980 இல் விமானத்தை முழுவதுமாக சாப்பிட்டு முடித்தார்.
இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மிச்சலுக்கு உடல் அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்தனர்.
மேலும் மிச்சலின் குடல்கள் கூர்மையான பொருட்களையும், இரும்பு பொருட்களையும் செரிமானம் செய்யும் வகையில் கடினமாக உள்ளதாக தெரிவித்தனர்.