உலகம்

கோமாவில் இருந்து நினைவு திரும்பிய கன்னிப்பெண் - குழந்தைகள் எங்கே என கேட்டதால் அதிர்ச்சி

பிரான்ஸில் திருமணம் ஆகாத இளம்பெண், கோமாவில் இருந்து எழுந்தவுடன் தனது குழந்தைகளை கேட்டதால் அதிர்ச்சி

பிரான்ஸ் நாட்டில் கோமாவில் இருந்து நினைவு திரும்பிய இளம்பெண், தனது மூன்று குழந்தைகள் எங்கே என்று கேட்ட நிகழ்வு, மருத்துவ உலகை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள லியோன் நகரில் க்ளெலியா வெர்தியர் என்ற 19 வயதான இளம்பெண் விபத்துக்கு உள்ளாகி மருத்துவமமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் நினைவிழந்த க்ளெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று வாரங்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதை தொடர்ந்து இளம்பெண்ணுக்கு நினைவு திரும்பியதும் மிலா, மிலேஸ், மைலீ என்ற மூன்று பெயர்களை குறிப்பிட்டு தனது குழந்தைகளை எங்கே என்று மருத்துவர்களிடம் கேட்டுள்ளார்.

இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், மூளை நரம்பில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டதால், ஏழு வருடங்களாக மூன்று குழந்தைகளை வளர்த்து வந்ததாக மாயையில் வாழ்ந்துள்ளதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தனியார் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த க்ளெலியா, “நான் எனது குழந்தைகளுடன் ஒன்றாக சாப்பிட்டது, தூங்கியது, அன்பை பரிமாறிக் கொண்ட நிகழ்வுகள் எல்லாம் கனவாக இருந்தாலும் மனதுக்கு நெருக்கமானதாக உள்ளதாக” தெரிவித்துள்ளார்.