உலகம்

பாலி தீவில் படகு கடலில் மூழ்கி விபத்து: 4 பேர் உயிரிழப்பு - 38 பேர் மாயம்

விபத்துக்குள்ளான படகில் 14 லாரிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்தன. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.

மாலை மலர்

இந்தோனேசியாவில் உள்ள பிரபல சுற்றுலா தலமான பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான படகில் 53 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் 14 லாரிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்தன.

விபத்து நடந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.

இந்த விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 38 பேர் மாயமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மாயமானவர்களை தீவிரமாக தேடி வருவதாக அதிகாரிகள் கூறினர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.