தந்தையால் காட்டில் உயிருடன் புதைக்கப்பட்ட 11 மாதக் குழந்தையை காவல்துறையினரால் அதிசயமாக மீட்கப்பட்டது.
அமெரிக்காவின் தென் கரோலினாவின் லெக்சிங்டன் நகரில் 25 வயதான தந்தை மைக்கேல் கோமரே தனது 11 மாத குழந்தை மற்றும் தன் தாயுடன் (குழந்தையின் பாட்டியுடன்) வசித்து வந்தார்.
பாட்டி வெளியே சென்று வீடு திரும்பியபோது குழந்தையையும் மைக்கேலையும் காணவில்லை. பாட்டி உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
காவல்துறை நடத்திய தேடுதலில் கடந்த திங்கள்கிழமை இரவு, ஒரு கட்டிடத்தில் இருந்து மைக்கேல் கோமரை காவல்துறை கைது செய்தது, ஆனால் குழந்தை அவருடன் இல்லை.
செவ்வாய்க்கிழமை மதியம் சுமார் 1:30 மணியளவில் மைக்கேல் கோமரின் காட்டில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை நடைபெற்றது.
சுமார் 100 காவல்துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
வீட்டிலிருந்து சுமார் 50 கெஜம் தொலைவில், காட்டில் மண் தளர்வாக இருப்பதையும், அதன் மேல் பைன் மர ஊசிகள் சிதறிக் கிடப்பதையும் அதிகாரிகள் கவனித்தனர்.
அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அந்த மண்ணை அகற்றியபோது, உள்ளிருந்து குழந்தை சத்தமாக அழும் சத்தம் கேட்டது.
அதிகாரிகள் உடனடியாக மண்ணை அகற்றி பார்த்தனர். அப்போது குழந்தை நாய் கூண்டில் வைத்து பூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. சுமார் ஒரு அடி ஆழத்தில் அந்த கூண்டு புதைக்கப்பட்டிருந்தது.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, தற்போது சீரான நிலையில் இருப்பதாகவும், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூண்டைச் சுற்றி ஒரு துண்டு சுற்றப்பட்டிருந்ததால், அதில் இருந்த ஈரப்பத காற்றும், குளிர்ந்த இரவு நேர காற்றும் குழந்தாய் சுவாசித்து உயிர் பிழைக்க உதவியது என அதிகாரிகள் தெரிவித்தனர் .
குழந்தையின் தாயுடன் மைக்கேல் கோமருக்கு சில பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படுகிறது. அதுதான் அவரின் இச்செயலுக்கு காரணமா என இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் காவல்துறை கூறியுள்ளது.
தனது குற்றத்திற்காக எந்த வருத்தமும் அவர் காட்டவில்லை என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
கடந்த வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மைக்கேலுக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுத்தது.