ஈரானின் புரட்சிகர காவல்படையின் Quds Force தளபதியாக இருந்தவர் காசிம் சுலைமானி. 2020 ஜனவரியில் பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில் சோலிமானி கொல்லப்பட்டார்.
ஈரானுடன் அமெரிக்கா கடந்த ஒரு மாத காலமாக போரில் ஈடுபட்டு வரும் நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த காசிம் சுலைமானியின் மருமகள் ஹமீதா சுலைமானி அப்ஷர் மற்றும் அவரது மகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் நிரந்தர வசிப்பிட உரிமையை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
ஹமீதா மற்றும் அவரது மகளை அமெரிக்க பெடரல் ஏஜெண்டுகள் காவலில் எடுத்துள்ளனர். அவர்கள் தற்போது குடிவரவு அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளனர். விரைவில் அவர்கள் ஈரானுக்கு நாடுகடத்தப்பட உள்ளனர்.
மார்கோ ரூபியோ தனது எக்ஸ் பதிவில், "சமீப காலம் வரை ஹமீதா மற்றும் அவரது மகள் அமெரிக்காவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
அவர் சுலைமானியின் உறவினர் மட்டுமல்ல, ஈரான் அரசின் தீவிர ஆதரவாளர். அமெரிக்காவை சாத்தான் என்று அழைத்தவர்களுக்கும், அமெரிக்க எதிர்ப்புப் போக்கு கொண்டவர்களுக்கும் டிரம்ப் ஆட்சியில் இடமில்லை" என குறிப்பிட்டுள்ளார்.
ஹமீதாவின் கணவரும் அமெரிக்காவிற்குள் நுழையவும் வெளியுறவுத்துறை தடை விதித்துள்ளது.