டிரம்ப்  
உலகம்

ரஷியா - உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் அமல் - அறிவித்த டிரம்ப் - ஜெலன்ஸ்கி ரியாக்ஷன் இதுதான்

ரஷியாவின் டீசல் ஏற்றுமதி மீதான தடையை அமெரிக்கா தளர்த்தியது.

ரஷியா - உக்ரைன் இடையே எரிசக்தி போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

ரஷியாவும் உக்ரைனும் 2022 முதல் போரில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாடுகளும் தத்தமது எரிசக்தி உள்கட்டமைப்புகளை டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் அண்மை காலமாக தாக்கி வருகிறது.

இதனால் இரு நாடுகளிலும் சாமானிய மக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரில், எரிசக்திப் போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார்.

கடந்த வாரம் ரஷிய அதிபர் புதினுடன் ரஷியாவில் பரவுவதாக நம்பப்படும் பிளேக் நோய் பரவல் குறித்து கேட்டறிந்தார்.

இதன்போது எட்டப்பட்ட புரிந்துணர்வு படி ரஷியாவிடம் இருந்து அமெரிக்கா டீசல் வாங்கி விதமாக ரஷியாவின் டீசல் ஏற்றுமதி மீதான தடையை அமெரிக்கா தளர்த்தியது.

எரிசக்தி போர் நிறுத்தம்

இந்நிலையில் ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள டிரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகத் தளத்தில் ஒரு பதிவை நேற்று அறிவித்தார்.

"ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரில், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் எரிசக்தி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது" என அவர் பதிவிட்டார்.

இருப்பினும், எரிசக்தி போர்நிறுத்தத்தின் நோக்கம், அதைச் செயல்படுத்தும் முறை மற்றும் இரு நாடுகளும் இதற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளனவா என்று அவர் தெரிவிக்கவில்லை.

ஜெலன்ஸ்கி பதில்

இதனிடையே உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை ரஷியா நிறுத்தினால், ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த உக்ரைன் தயாராக உள்ளது என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

"எங்கள் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை ரஷியா நிறுத்தினால், ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த உக்ரைன் தயாராக இருக்கிறது.

பதற்றத்தைத் தணிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் பரஸ்பரமானதாகவும், உண்மையான வாக்குறுதிகளால் ஆதரிக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும்" என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

உக்ரைனுக்கு புதிய அதிபர்

இதன் மத்தியில் உக்ரைனுக்கு ஒரு புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக டிரம்ப் தெரிவித்தார். இது டிரம்ப் சுயநலத்துக்காக போரில் உக்ரைன் பக்கம் இருந்து ரஷியா பக்கம் சாய்ந்துள்ளதாக விமர்சனத்துக்கு வழி வகுத்தன.

டிரம்பின் கருத்துகளுக்குப் பதிலளித்த உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா, "ஜெலென்ஸ்கி நாட்டின் சுதந்திரப் போரில் தலைமை தாங்குகிறார்.

அவருக்கு உக்ரேனிய மக்களின் ஆதரவு உள்ளது, மேலும் முடிவுகளை எடுக்கும் உரிமை மக்களுக்கு உண்டு. வெளிநாடுகளில் இருந்து வரும் அறிக்கைகள் ஜெலென்ஸ்கியின் பணிகளைப் பாதிக்காது" என்று திட்டவட்டமாகக் கூறினார்.

SCROLL FOR NEXT