உலகம்

OpenAI நிறுவனத்திற்கு எதிராக எலான் மஸ்க் தொடுத்த வழக்கு தள்ளுபடி!

மஸ்க் தனது வழக்கைத் தாக்கல் செய்ய மிகவும் தாமதித்ததாகவும், காலவரையறைச் சட்டத்தின் கெடுவைத் தவறவிட்டதாகவும் ஒன்பது பேர் கொண்ட நடுவர் குழு கண்டறிந்து வழக்கை தள்ளுபடி செய்தது.

உலகின் மிகப் பெரிய பணக்காரரான மஸ்க், 2015-ல் தொடங்கப்பட்டு பின்னர் ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவராவார்.

OpenAI நிறுவனம் முதலில் இலாப நோக்கமற்ற அமைப்பாகத் தொடங்கப்பட்டது. அனைத்து மனிதகுலத்திற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்பட வேண்டும் என்பது இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.

பின் நாட்களில் இலாபத்தை மையமாகக் கொண்ட அமைப்பாக மாறியது குறித்து எலான் மஸ்க் குற்றம் சாட்டி இந்நிறுவதின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் மஸ்க் தனது வழக்கைத் தாக்கல் செய்ய மிகவும் தாமதித்ததாகவும், காலவரையறைச் சட்டத்தின் கெடுவைத் தவறவிட்டதாகவும் ஒன்பது பேர் கொண்ட நடுவர் குழு ஒருமனதாகத் தீர்ப்பளித்து தள்ளுபடி செய்தது.

SCROLL FOR NEXT