உலகம்

உலகின் முதல் டிரில்லியனர் ஆனார் எலான் மஸ்க்

இவரது சொத்து மதிப்பில் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களில் அவரது பங்குகளை உள்ளடக்கியது.

உலகின் முதல் டிரில்லியனர் ஆனார் எலான் மஸ்க். இதையடுத்து எலான் மஸ்க்-க்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 11 சதவீதம் அதிகரித்தது.

இதன் காரணமாக பங்குச்சந்தையில் கால்பதித்த முதல் நாளில் ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் 150 டாலர்களாக அதிகரித்து அதிகபட்சம் 167 டாலர்கள் வரை உச்சம் தொட்டது.

பங்குகள் உயர்வு காரணமாக அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.18 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்தது. பங்குசந்தையில் கால்பதித்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன பங்குகள் விலை 135 டாலர்களில் இருந்து 150 டாலர்களாக அதிகரித்தது.

சொத்து மதிப்பு:

இதன் காரணமாகவே ஸ்பேஸ்எக்ஸ் உரிமையாளரான எலான் மஸ்க் சொத்து மதிப்பு கணிசமாக அதிகரித்து அவர் உலகின் முதல் டிரில்லியனர் ஆனார். இவரது சொத்து மதிப்பில் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களில் அவரது பங்குகளை உள்ளடக்கியது.

இந்த இரு நிறுவனங்கள் மட்டுமின்றி நியூராலிங்க், தி போரிங் கம்பெனி போன்ற நிறுவனங்களிலும் எலான் மஸ்க் பங்குதாரராக இருக்கிறார்.

கடந்த ஜனவரி 2021-ஆம் ஆண்டு அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்-ஐ பின்னுக்குத் தள்ளி எலான் மஸ்க் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்துக்கு சொந்தக்காரர் ஆனார்.