உலகம்

சிறார்களுக்கான புக்கர் பரிசு: நடுவராக தேர்வு செய்யப்பட்ட 8 வயது சிறுமி

ஆங்​கில மொழி​யில் வெளி​யிடப்​படும் சிறந்த புனைகதை புத்​தகத்​துக்கு புக்கர் பரிசு விருது வழங்​கப்​படுகிறது.

முதல் முறையாக வழங்கப்படவுள்ள சிறார்களுக்கான புக்கர் பரிசுக்கான தேர்வுக்குழுவில், பிரிட்டனைச் சேர்ந்த லூனா எனும் 8 வயது சிறுமி நடுவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இங்​கிலாந்து மற்​றும் அயர்​லாந்​தில் ஆங்​கில மொழி​யில் வெளி​யிடப்​படும் சிறந்த புனைக் கதை புத்​தகத்​துக்கு ஒவ்​வொரு ஆண்​டும் புக்​கர் பரிசு என்ற இலக்​கிய விருது வழங்​கப்​படுகிறது. இதற்கு 50,000 பவுண்ட் பரிசு அளிக்​கப்​படு​கிறது.

இதற்கிடையே, அடுத்த ஆண்டு முதல் 8 முதல் 12 வயது சிறு​வர்​களுக்​கான கதை புத்​தகத்​துக்​கும் புக்​கர் பரிசு வழங்க புக்​கர் பரிசு அறக்​கட்​டளை முடிவு செய்தது.

இந்த கதை புத்​தகத்தை குழந்​தைகளும் அடங்​கிய நடு​வர் குழு தேர்வு செய்​யும். தேர்வு செய்​யப்​படும் சிறு​வர் கதை புத்​தகத்​துக்கு அடுத்த ஆண்​டிலிருந்து புக்​கர் பரிசு வழங்​கப்​படும்.

நடுவராக 8 வயது சிறுமி

இந்நிலையில், முதல் முறையாக வழங்கப்படவுள்ள சிறுவர்கள் புக்கர் பரிசுக்கான தேர்வுக் குழுவில், பிரிட்டனின் கென்ட் பகுதியைச் சேர்ந்த லூனா என்ற 8 வயது சிறுமி நடுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முதல் குழந்தைகளுக்கான புக்கர் பரிசுக்கான 8 நூல்கள் கொண்ட இறுதிப்பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. வெற்றியாளர் பிப்ரவரி 2, 2027 அன்று லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT