உலகம்

ஆப்கானிஸ்தான் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இந்திய நேரப்படி இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானில் இன்று காலை இந்திய நேரப்படி 9.30.03 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

140 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.545 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.409 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை சார்பில் தொடர்ந்து மனிதாபிமான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.