ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 5.29 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
150 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.833 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.447 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
கடந்த 6ம் தேதி ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை சார்பில் மனிதாபிமான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.