ஜப்பானின் வடக்கு மாகாணமான ஹோக்கைடோவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகி உள்ளது.
ஜப்பான் நேரப்படி இன்று அதிகாலை 5:24 மணியளவில் ஹோக்கைடோ பகுதியில் சுமார் 80 கிலோமீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் மையம் கொண்டிருந்ததாக நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஹோக்கைடோவின் டோகாச்சி உள்ளிட்ட பகுதிகளில் நிலஅதிர்வுகள் கடுமையாக உணரப்பட்டன.
நிலநடுக்கத்தின்போது கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியதால் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.