உலகம்

ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.அங்கு ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.

மாஸ்கோ:

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக ரஷியாவுக்கு சென்றார். மாஸ்கோ சென்றடைந்த அவருக்கு அந்நாட்டின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய மந்திரி ஜெய்சங்கர், ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்தார். அப்போது இருதரப்பு விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு நாடுகளின் உறவுகள், குறிப்பாக வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாட்டு மந்திரிகளும் விவாதிக்க உள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தின்போது மந்திரி ஜெய்சங்கர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கும் செல்கிறார்.