அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பியது.
இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு சென்றுள்ளார். இவருடன் 3 விண்வெளி வீரர்கள் சென்றுள்ளனர்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் அவர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 6 முறை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆக்சியம் 4 திட்டம் நேற்று வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் நேற்று விண்வெளி பயணம் மேற்கொண்டனர்.
புளோரிடாவில் இருந்து பால்கன் 9 மூலம் டிராகன் விண்கலத்தில் நால்வரும் விண்வெளிக்கு பயணித்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட குழு சரியாக 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.
LIVE: @Axiom_Space's #Ax4 mission is scheduled to dock with the @Space_Station at approximately 6:30am ET (1030 UTC). Watch with us as the multinational crew starts their two-week stay aboard the orbiting laboratory. https://t.co/NrThYrmRrN