உலகம்

டெல்லியில் நடந்த நிகழ்வில் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

எனக்கு பிரதமரை மிகவும் பிடிக்கும். மோடி சிறந்தவர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கலந்துகொண்ட, டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி மூலம் நேரலையில் தோன்றி, பிரதமர் நரேந்திர மோடியை தனது "தீவிர ரசிகர்" என்று பாராட்டினார்.

அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின் 250வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய நிகழ்வில் இந்த சம்பவம் அரங்கேறியது. நிகழ்வில் காணொளியில் தோன்றிய அதிபர் டிரம்ப், "செர்ஜியோ, நீங்கள் நமது நாட்டின் பிரதிநிதியாக இருக்க வேண்டும். ஆனால் நான் அனைவருக்கும் வணக்கம் சொல்ல விரும்புகிறேன். எனக்கு பிரதமரை மிகவும் பிடிக்கும். மோடி சிறந்தவர். அவர் என் நண்பர்," என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அதிபர் டிரம்ப், "நீங்கள் எங்களை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்துவீர்கள் என்று எனக்கு தெரியும். அனைவரும், உங்கள் மாலை பொழுதை மகிழ்ச்சியாக கழியுங்கள். மேலும், பிரதமர் மோடியுடன் பேசி, அவருக்கு வணக்கம் சொல்வது ஒரு கௌரவம். நான் அவருடைய தீவிர ரசிகன் என்பதையும் அவரிடம் தெரியப்படுத்துங்கள்," என்று தெரிவித்தார்.

இது அந்த நிகழ்வில் நிறுவப்பட்டிருந்த ஒரு பிரம்மாண்டமான திரையின் முன் ரூபியோ நின்றபடி கண்டுரசித்தார். மேலும், பிரதமர் மோடி வெள்ளை மாளிகைக்கு வருகை தர வேண்டும் என டிரம்ப் சார்பாக செர்ஜியோ அழைப்பு விடுத்தார்.

அமெரிக்காவில் ஏற்கனவே சட்டப்பூர்வமாக வசித்து வரும் பல குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேறி, வெளிநாடுகளில் இருந்து நிரந்தர வசிப்பிட உரிமைக்கோ அல்லது கிரீன் கார்டுக்கோ விண்ணப்பிக்குமாறு கேட்டு கொண்ட ஒரு பெரிய குடியேற்ற கொள்கை மாற்றம் கவலைகளை எழுப்பிய சில நாட்களுக்குப் பிறகு அவரது இந்திய பயணம் அமைந்துள்ளது.