உலகம்

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஓமனை எச்சரித்த டிரம்ப்?

ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும் இல்லையெனில் அவர்களை தகர்த்துவிடுவேன் என்று டிரம்ப் கூறினார்.

Maalaimalar

ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரானுக்கு ஓமன் ஆதரவளித்தால், அந்நாட்டை தாக்குவோம் என அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியது அச்சுறுத்தலாக தோன்றியது.

ஈரானும் வளைகுடா நாடும் ஜலசந்தியை கட்டுப்படுத்த அனுமதிக்கும் ஒரு குறுகிய கால ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்கப்பட்டபோது, ​​"ஓமன் ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும் இல்லையெனில் அவர்களை தகர்த்துவிடுவேன்" என்று டிரம்ப் கூறினார்.

"இல்லை, அந்த ஜலசந்தி அனைவருக்கும் திறந்தே இருக்கும்," என்று வெள்ளை மாளிகையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். இது சர்வதேச கடல் பகுதி, ஓமனும் மற்றவர்களை போலவே நடந்துகொள்ளும், இல்லையென்றால் நாங்கள் அவர்களை தகர்க்க வேண்டியிருக்கும். அதை அவர்கள் புரிந்துகொள்வார்கள், அவர்களுக்கு ஒன்றும் ஆகாது.

டிரம்ப் தவறுதலாகப் பேசிவிட்டாரா அல்லது ஓமானுக்கு பதிலாக ஈரானைக் குறிப்பிட நினைத்தாரா என்று கேட்டதற்கு, வெள்ளை மாளிகை உடனடியாக பதிலளிக்கவில்லை.

அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியான ஓமன், மத்திய கிழக்கு போரில் மத்தியஸ்தம் செய்ய முயன்றதுடன், தெஹ்ரானின் தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.