உலகம்

ரகசிய ஆவணங்களை எடுத்துச்சென்ற விவகாரம் - மியாமி கோர்ட்டில் ஆஜரானார் டிரம்ப்

வழக்கு விசாரணைக்காக இன்று மியாமி கோர்ட்டில் டொனால்டு டிரம்ப் ஆஜரானார்.இதையடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மாலை மலர்

வாஷிங்டன்:

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அரசின் ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது. 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த காலகட்டத்திலான ஆவணங்களை டிரம்ப் அரசிடம் ஒப்படைக்காமல் எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக டிரம்ப் மீது மியாமி கோர்ட்டில் கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், அரசின் அணு ஆயுத திட்டங்கள், ராணுவம் உள்ளிட்ட ரகசிய ஆவணங்கள் டிரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக இன்று மியாமி கோர்ட்டில் டொனால்டு டிரம்ப் ஆஜரானார். இதையடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.