மடகாஸ்கர் தீவு 
உலகம்

மடகாஸ்கர் கப்பல் விபத்து- பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு

கப்பலின் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாலை மலர்

அண்டனானரிவோ, மடகாஸ்கர்:

ஆப்பிரிக்க கண்டத்தின் தீவு நாடான மடகாஸ்கரில் சுமார் 130 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல், நேற்று முன்தினம் இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. பயணிகள் கடலில் விழுந்து தத்தளித்தனர். சிலர் நீச்சல் தெரியாததால் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். 

கடலோர காவல் படையினர் உதவியுடன் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இறந்தவர்கள் உடல்கள் மீட்கப்பட்டன. தண்ணீரில் தத்தளித்த சுமார் 45 பேர் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இன்று காலையில் செய்ன்ட் மாரே தீவுகள் அருகே 25 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன்மூலம், பலி எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20 பேரை காணவில்லை. அவர்களை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

கப்பலின் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் வேகமாக சென்று பாறையில் மோதி விபத்து ஏற்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.