உயிர் பிழைத்த சிறுவன்
உலகம்

நேபாளம் வெள்ளத்தின் போது மரத்தில் ஏறி உயிர் தப்பிய 8 வயது சிறுவன்: திகில் அனுபவத்தை பகிர்ந்த தாய்..!

நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கிய 8 வயது சிறுவன் மரத்தில் ஏறி உயிர் தப்பித்து, பின்னர் வான்வழியாக மீட்கப்பட்டு தாயிடம் சேர்க்கப்பட்டுள்ளான்.

பெரு வெள்ளம்

நேபாளத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டநாளன்று ரசுவா மாவட்டத்தைச் சேர்ந்த சோயல் என்ற சிறுவனும், அவனது சகோதரனும் பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளனர். வீட்டில் நெசவு வேலை செய்து கொண்டிருந்த சிறுவனின் தாய் மாட்டி மாயா தமாங் திடீரென பூகம்பம் போன்ற சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டார்.

மரங்களில் ஏறி தப்பிய சிறுவன்

லாங்டாங்லிருங் மலையின் அருகே பனிப்பாறை சரிந்து பெரும் வெள்ளம் ஏற்படத்தில் பள்ளத்தாக்கு பகுதி முழுமையாக அடித்துச் சென்றன. பள்ளியை நோக்கி ஓடிய தமாங், அந்தப் பகுதி முழுவதும் தண்ணீர், கற்கள், சேறு மட்டுமே இருந்தை கண்டு அதிர்ந்து போனார்.

வெள்ளம் பள்ளியை சூழ்ந்தபோது, சோயல் தனது நன்பனுடன் அருகிலிருந்த காட்டுக்கள் ஓடிச் சென்று மரங்களில் ஏறி வெள்ள நீரில் இருந்து தப்பி உள்ளான். வெள்ளத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றபொது சிறுவனின் காலில் எலும்பு முறிவு மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டது. இதற்கிடையே சோயலின் 28 வயதான தாய் தமாங், தனது இரு மகன்களையும் காணாமல் பல்வேறு தங்குமிடங்கள் மற்றும் மீட்பு மையங்களில் தேடி அலைந்தார்.

இருவரும் உயிரிழந்திருக்கலாம் என ஒரு கட்டத்தில் அவர் நினைத்து கவலைப்பட்டார். இந்நிலையில் பல மணி நேர தேடுதலுக்கு பிறகு மரத்தில் இருந்த சிறுவன் மீட்கப்பட்டான்.

தாயை கண்ட மகன்

ஹெலிகாப்டர் மூலம் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிறுவன் அழைத்து செல்லப்பட்டான். சிறுவனிடம் பயந்து விட்டாயா என்று கேட்டபோது இல்லை என்று தலை அசைத்து பதில் கூறினார். சோயல் உயிர் பிழைத்ததை அவரது தாயாரிடம் தெரிவித்தனர். அதை அறிந்த பிறகு போன உயிர் திரும்ப வந்தது போல் இருந்ததாக தமாங் கூறியுள்ளார்.

மேலும் மகன் உயிர் பிழைத்தது குறித்து தாய் தமாங் கூறியதாவது:-

என் இரு குழந்தைகளும் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்து விட்டேன். என்னால் அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. பல மணி நேரம் தேடி இளைய மகனை கண்டு பிடித்தேன். மூத்த மகனையும் கண்டுபிடித்த பிறகு என் உயிரே திரும்பி வந்தது போல் உணர்ந்தேன்.

இவ்வாறு தமாங் தெரிவித்துள்ளார்.

நேபாள பேரழிவில் வடக்கு நேபாளத்தின் ரசுவா, நுவாகோட், தாதிங் உள்ளிட்ட மாவட்டங்களில் குறைந்தது 17 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தில் குடும்பத்தினரை பிரிந்த குழந்தைகளை கண்டறிந்து, பதிவு செய்து, அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் பணியில் இணைக்கும் நேபாள அரசுடன் ஈடுபட்டு வருகிறது.