உலகம்

சீன அதிபர் ஜின்பிங் இன்று அமெரிக்கா பயணம்- நாளை டிரம்ப்புடன் சந்திப்பு

அமெரிக்காவில் மக்களின் அன்றாட செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.

சீன அதிபா் ஜின்பிங் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறாா். பயணத்தின் முக்கிய நிகழ்வாக, வெள்ளை மாளிகையில் நாளை(வியாழக்கிழமை) அமெரிக்க அதிபா் டிரம்பை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்துகிறார்.

இந்த முக்கிய சந்திப்பில், வா்த்தகம், ஏ.ஐ., தொழில்நுட்பப் பாதுகாப்பு, சா்வதேசப் பாதுகாப்பு, தைவான் விவகாரம் மற்றும் பிராந்திய மோதல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

2015-ம் ஆண்டுக்குப்பின் சீன அதிபர் அமெரிக்கா செல்வது இது முதல்முறை ஆகும். டிரம்ப்பும் ஜின்பிங்கும் நேருக்கு நேர் சந்திப்பது இது 2-வது முறை ஆகும்.

கடந்த மே மாதம் இருவரும் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் சந்தித்தனர். அதன் பிறகு சர்வதேச அளவில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அமெரிக்காவில் மக்களின் அன்றாட செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.

இது நவம்பர் மாதம் அங்கு நடைபெறவுள்ள இடைக்கால தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்படுகிறது. ஈரான் விவகாரத்தால் நாட்டின் பொருளாதாரம் ஏற்கெனவே கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், சீனாவுடன் எந்தவொரு பொருளாதார ரீதியிலான மோதலையும் அவர் தொடுக்க முடியாத நிலையில் உள்ளார்.

அதே சமயம், சீனாவில் உள்நாட்டு நுகர்வு குறைவு மற்றும் ரியல் எஸ்டேட் துறையின் மந்தநிலை ஆகிய வற்றை சீன அதிபர் ஜின்பிங் எதிர்கொண்டு வருகிறார்.

எனவே, அமெரிக்காவில் செயல்படும் சீன நிறு வனங் களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும், சீனப் பொருட் கள் மீது வாஷிங்டன் புதிய வரிகளை விதிக்காமல் இருப்பதை உறுதி செய்யவும் அவர் முயல்வார் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT