ரஷியா மீது உக்ரைன் தாக்குதல்
உலகம்

ரஷியா மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்: 13 பொதுமக்கள் உயிரிழப்பு- பலர் காயம்

ரஷியாவில் உள்ள எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையங்களை குறிவைத்து உக்ரைன் 456 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

மத்திய ரஷியாவில் உள்ள நிஸ்னேகாம்ஸ்க் நகரில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல் 13 பேர் உயிரிழந்தனர்.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் குறிவைத்து தாக்குதல்

உக்ரைனில் எல்லையில் இருந்து சுமார் 1000 கி.மீ. தொலைவில் உள்ள தொழில் நகரமான நிஸ்னேகாம்ஸ்க்கில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் இந்த தாக்குதலில் 13 பொதுமக்கள் உயிரிழந்ததாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 75 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

ரஷியாவின் டாடர்ஸ்டான் எண்ணெய் வளங்களுக்கான மிகப்பெரிய பிராந்தியம் ஆகும். இங்கு ஏராளமான மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. ரஷியாவின் பதிலடி தாக்குதலுக்கான இந்த பகுதியை இலக்காக கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.

வெளிநாட்டினரும் உயிரிழப்பு

உக்ரைன் ராணுவம் சார்பில் டெனேகோ எண்ணெய் சுத்திகரிப்பு அலை மீது தாக்குதல் நடத்திய தெரிவித்துள்ளது. இதன்மூலம் ரஷிய ராணுவத்திற்கான எரிபொருள் சப்ளையை குறைக்க முடியும் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதில் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டதாக ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்

இதற்கிடையே உக்ரைன் மீதும் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. கார்கீவ் பிராந்தியத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கிராமத்தில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்திய நேரப்படி நேற்றிரவில் இருந்து இன்று காலை 456 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம தெரிவித்துள்ளது. இதில் எத்தனை டிரோன்கள் இலக்குகளை அடைந்து சேதம் விளைவித்தது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. அதேவேளையில், ரஷியா 126 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.