துருக்கிக்கு பயணம் மேற்கொண்டுள்ள கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறியதாவது:-
போர் குறித்து அமெரிக்கா எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை. எந்தவொரு ராணுவ நடவடிக்கையிலும் பங்கேற்கும் எண்ணம் கனடாவிற்கு இல்லை.
எங்கள் வெளியுறவுக் கொள்கை பதற்றத்தைத் தணிப்பதிலும், பொதுமக்களைப் பாதுகாப்பதிலும், மனிதாபிமானத்திலும் கவனம் செலுத்துகிறது.
பதற்றத்தைத் தணிப்பதே மிக முக்கிய முன்னுரிமை ஆகும். பொதுமக்களின் உயிர்களின் நலனுக்காக மத்திய கிழக்கில் போர் முடிவுக்கு வர வேண்டும்..
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரான் தலைவர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
இஸ்ரேல் ராணுவ அதிகாரி எபி டெப்ரின் கூறும்போது,
“இஸ்ரேல் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எவரையும் நாங்கள் தொடர்ந்து துரத்திச் செல்வோம். இஸ்ரேலுக்கு எதிராகக் கை ஓங்கும் எவரும் எங்கள் நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது.
நாங்கள் அவர்களை துரத்திச் சென்று கண்டுபிடித்து, ஒழித்துக்கட்டுவோம். இதை நாங்கள் ஏற்கனவே நிரூபித்துள்ளோம்.
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் இருப்பிடம் குறித்த தகவல்கள் தற்போது எதுவும் எங்களிடம் இல்லை” என்றார்.