கலிபோர்னியாவில் இசை நிகழ்ச்சியில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்ட்ராத்மோரில் துலாரே கவுண்டியில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி ஒன்றில் சுமார் 150 பேர் கலந்துகொண்டனர்.
இரவு சுமார் 7:30 மணியளவில் அங்கு வந்த மரம் நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர்.
குறிப்பாக மார்பில் குண்டு பாய்ந்த 26 வயது இளைஞர் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 19 மற்றும் 22 வயதுடைய மேலும் இருவருக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதே நேரத்தில் மற்ற ஆறு பேர் சிறு காயங்களுடன் தப்பினர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு குற்ற கும்பல் தொடர்பானதாக இருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் இதுவரை மேலதிக விவரங்கள் எதையும் வெளியிடவில்லை. இதுவரை யாரும் கைது செய்யப்பட்டதாகத் தகவல் இல்லை.