அமெரிக்காவின் நியூயார்க்கில் பிளாட்புஷ் என்ற பகுதியில் 3 மாடி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது.
உடனே தீயணைப்பு வீரர்கள், மீட்புக்குழுக்கள் விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள். 17 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில், 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இடிந்து விழுந்த கட்டிடத்துடன் சுவரையொட்டியுள்ள மற்றொரு கட்டிடத்தின் சுவர் முழுமையாக இடிந்து அங்கிருந்த அறைகள், ஒரு படுக்கையறை மற்றும் ஆடைகள் நிறைந்த அலமாரிகள் வெளியே தெரிந்தன.
கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
மேலும், அப்பகுதியில் உள்ள மற்ற கட்டிடங்களின் கட்டமைப்பு உறுதித்தன்மையை அதிகாரிகள் சரிபார்த்து வருகிறார்கள். விபத்து நடந்த பகுதியில் கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.