நேபாள வெள்ளப்பெருக்கு  
உலகம்

திபெத்தில் உடைந்த அணை.. நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் - மக்களுக்கு எச்சரிக்கை

நீர் அடைபட்டு அணை உடைந்து இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திபெத்தில் மற்றொரு அணை உடைந்ததால் மீண்டும் நேபாளத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேபாள வெள்ளம்

நேபாளத்தில் நேற்று முன் தினம் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது.

நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இமயமலையில் திபெத் சீன எல்லையில் உற்பத்தியாகும் கைரோங் நகருக்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவு தான் இந்த வெள்ளபெருக்குக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

போதே கோஷி நதியில் பனிப்பாறைகள் விழுந்து ஏற்பட்ட அடைப்பினால் அதிகளவில் நீர் அடைபட்டு அணை உடைந்து இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

புதிய ஏரிகள்

முன்னதாக திபெத் பகுதியில் மீண்டும் புதிதாக ஒரு பெரிய ஏரி உருவாகி உள்ளதாக சீனா எச்சரிக்கை விடுத்தது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் கியிராங் எல்லைத் துறைமுகத்திற்கு அருகே ஏற்பட்ட நிலச்சரிவு ஒரு தடுப்பு ஏரியை உருவாக்கி உள்ளது என்றும் இதனால் அடுத்த 3 நாட்களில் மீண்டும் வெள்ள அபாயம் உள்ளதாகவும் சீனா தெரிவித்தது.

நேற்று காலை நிலவரப்படி, அந்த ஏரியில் சுமார் 2 மில்லியன் கன மீட்டர் நீர் தேங்கியிருந்தது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், அடுத்த மூன்று நாட்களில் நீர்வரத்து சுமார் 3 மில்லியன் கன மீட்டரை எட்டும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

இது ஏரி உடைந்து, கீழ்நிலைப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

நேற்று காலை நிலவரப்படி, அந்த ஏரியில் சுமார் 20 லட்சம் கன மீட்டர் நீர் தேங்கியிருந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், அடுத்த 3 நாட்களில் நீர்வரத்து சுமார் 30 லட்சம் கன மீட்டரை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தடுப்பு ஏரி, பெருமளவிலான நீரைத் தடுத்து நிறுத்தி வருகிறது. இதில் பாறைத் தடுப்பு உடைந்தால், அந்த நீர் நேபாளத்தை நோக்கி கீழ்நோக்கிப் பாயும் என்று எச்சரிக்கப்பட்டது.

இதையடுத்து தங்களது எல்லைக்கு அருகே 2 தடுப்பு ஏரிகள் உருவானதைத் தொடர்ந்து, நேபாளமும் சீனாவும் புதிய வெள்ள எச்சரிக்கைகளை விடுத்தன.

மீண்டும் வெள்ளப்பெருக்கு?

இந்நிலையில் திபெத் பகுதியில் உள்ள மற்றொரு அணை உடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் திபெத் பகுதியில் உள்ள ஏரியின் அணை உடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மீட்புக் குழுவினரும் அப்பகுதி மக்களும் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு நேபாளக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நேபாள போலீசார் கூறும்போது, திபெத் பகுதியில் மீண்டும் ஒரு நீர் அணை உடைந்த தாகத் தகவல் கிடைத்து உள்ளது.

எனவே தற்போது மீட்புப்பணியில் ஈடுபட்டு உள்ள மீட்புக்குழுவினர், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கைகளை விடுத்து உள்ளோம்.

அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளோம் என்றனர்.

மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் நேபாளத்தில் மீட்புப்ப ணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு ராணுவத்தினர், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே ரசுவா மாவட்டத்தில் உள்ள ஒரு ஏரி கரை உடைந்து நீர்மட்டம் உயர்ந்து வருவ தாக அதிகாரிகள் தெரி வித்தனர்.

திபெத்

காட்டாற்று வெள்ளம் காரணமாக திபெத்தில் 550க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர் இதில் 260 பேர் வெளிநாட்டினர் ஆவர்.

இந்த நிலையில் இமயமலை பகுதியில் பயங்கர பனிச்சரிவால் உருவான ஏரியிலிருந்து மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் திபெத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணிகளை தற்காலிகமாக நிறுத்துமாறு மீட்புக் குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

இதற்கிடையே திபெத்தில் மீட்புப்பணிகள் குறித்து சீன அதிபர் ஜின்பிங், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் பனிப்பாறை மற்றும் தடுப்பு ஏரிகளைத் தீவிரமாகக் கண்காணிப்பது, காணாமல் போனவர்களைக் கண்டறியும் முயற்சிகள், நேபாளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரகால உதவி வழங்குவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.